Posts

Showing posts from October, 2018

இனிய பயண வாகனம்

Image
புதிதாக ஒரு பொருள் வரும்போது இருக்கும் பொருளுக்கு மதிப்பு மறுக்கப்பட்டு இடத்தை காலி செய்யும் நிலமை வந்து விடும்.ஆனால் ஏகப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகும் பெருமளவு குறைந்து போனாலும் சைக்கிள் இன்னும் அழியாமல் இருப்பது ஆறுதல். அப்படி எதுவும் ஆகிவிடாது. செலவே இல்லாமல் செல்லும் இடத்திற்கு அழைத்து செல்லும் சைக்கிளை ஒழித்துக்கட்ட யாருக்கும் மனசு வராது. இதன் பயண்பாடுகள் தான் குறைந்து விட்டது.ஆனால் இதன் மேல் உள்ள பாசம் யாருக்கும் எப்பவும் குறையாது சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியல் போடுவதை விட தீமை எதுவும் இல்லை என்று ஒரு வரியில் கூறிவிடலாம். அந்த அளவிற்கு நமக்கு பயன் தரக்கூடியது. ஆனால் அது கவணிக்கப்படாத போது செயல் இழந்து இயங்க மறுத்து முடங்கி விடுகிறது. பயனற்றுப் போகும் சைக்கிள் ரிப்பேர் கடைக்கு செல்வதற்கு பதில் பல நேரங்களில் பழைய இரும்பு கடைகளுக்கு சென்று விடும். அங்கே பரிதாபமாக அதன் பாகங்கள் பிரிக்கப்படும் ஆனாலும் பிரிந்த பாகங்கள் மீண்டும் ஒரு வகையில் சைக்கிளாக உயிர்ப்பெற்று கொண்டு தான் இருக்கின்றன தெரிந்தவர் ஒருவர் சொன்னார் "நான் அதிக நேரம் பைக்ல போவேன் சில நேரம் ப...

சிரிப்போம் சிந்திப்போம்

Image
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் அப்படினு சொல்லுவாங்க.சிரிப்பு அந்த புன்னகை இல்லாத போது அந்த இடமே ஒருவித அசாதரமான சூழ்நிலையாகவே மாறிவிடும் நகைச்சுவை என்பது யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது ஒருவருடைய குறையை சுட்டிக்காட்டி கேலி செய்து சிரிக்க வைப்பது என்பது மிகப்பெரிய கேவலம்.அப்படித் தான் சிரிக்க வைக்க வேண்டுமா என்ன.நகைச்சுவை என்பது அருமருந்து அது விஷமாகிவிடக் கூடாது நமக்கு தெரியாதவங்க சிலபேரு உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பாங்க அந்த கூட்டத்துல தெரிந்தவர் ஒருத்தரும் இருப்பார் அவரை பார்த்ததும் நாம் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே அருகில் சென்றால் அவரும் சிரித்தபடி வரவேற்பார் அருகில் இருப்பவர்களும் புன்னகைத்து பார்ப்பார்கள் அதற்கு பதிலாக நாம் அவரை கிண்டல் செய்யும் விதமாக நக்கலாக சிரித்துக்கொண்டே போனால் அப்புறம் அவ்வளவு தான் கரகாட்டக்காரன் படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி அது "எப்படிடா என்னப் பாத்து சிரிச்ச இத்தன பேரு இருக்காங்களே சிரிக்கக் கூடாதா"னு கேட்டு சண்டைக்கு வந்து விடுவார்.அதனால் இப்படிப்பட்ட சிரிப்புக்களை தவிர்த்து விடுவது நல்லது இப்படித் தா...

அணைவருக்கும் தேவையானது

Image
தனி ஒரு மனிதனாக யாரும் வளர்ந்து முன்னேறி விட முடியாது ஒருவர் செய்யும் உதவி ஒருவரை உயர்த்தும். ஒரு விசயத்தை தானே முடிவெடுத்து தன்னால் இது முடியும் என்றாலும் அடுத்தவரின் ஆலோசனை அது இன்னும் கூடுதலான வலிமையாக இருக்கும். ஆலோசனை கூறுபவர் அதை பற்றி தெரியாதவராகவும் இருக்கலாம் ஆனால் அவர் செய்யும் உதவியானது அவருடைய பேச்சில் வார்த்தையில் என்று ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.பொருள் தருவது மட்டும் உதவியல்ல பொன்னான வார்த்தைகளை கொடுப்பதும் உதவி தான்.பலர் ஒற்றுமையாக இருந்து ஒருவரை உயர்த்துவது தான் மனித வாழ்க்கை. ஒருவர் தானாக முன் வந்து உதவி செய்து விட்டு இன்னொரு நாளில் தனக்கு தேவையான நேரத்தில் அவர் உதவுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார் அந்த அக்கறை உதவி பெற்றவரிடம் இருக்க வேண்டும்.அடுத்தவருக்கு உதவும் குணம்  உடையவருக்கு அவர் செய்த நற்காரியங்களே அவருக்கு உதவும் கரங்களாக மாறும் ரோட்டில் ஒருவர் அலைந்து திரிந்து போகும் வழி தெரியாமல் விழிந்துக்கொண்டிருக்கும் போது நம்மிடம் கேட்டால் நமக்கு தெரியாவிட்டால் தெரியாது என்று ஒதுங்கி விடுவோம் தெரிந்தால் எப்படி சும்மா இருக்க முடிய...

நலம் தரும் நிம்மதி

Image
பயம் என்றாலே நம் மனதில் ஆவி போன்றவைகள் தான் வரும் அதையும் தாண்டி வாழும் வாழ்க்கையில் பல விசயங்கள் பயத்தின் பக்கம் சென்று விடுகின்றன ஏதாவது நல்லது நடக்கப்போகும் நேரத்தில் பதட்டத்தோடு சேர்த்து பயத்தையும் வரவலைக்காமல் நடப்பது நடக்கட்டும்.நம் மனதிற்கு  நல்லதே நடக்கும் என்ற முடிவை மனதில் வைத்து விட்டு நடந்தால் எந்நாளும் வாழ்க்கையில் நல்லதே நடக்கும். மனதில் நிம்மதியும் நலம் தரும் யாராவது கோபத்தில் ஒரு கடுஞ்சொல் சொன்னால் போதும் அதனால் முதலில் பாதிக்கப்படுவது மனசு. அதனால் தான் நிம்மதியும் பறிக்கப்படுகிறது அதனால் முதலில் மனசு பாதுகாப்போடு இருக்க வேண்டும் எப்போதும் மென்மையாக தூய்மையாக இருக்கும் நல்ல உள்ளத்தில் நிம்மதியும் பயம் இன்றி ஊஞ்சல் கட்டி ஆடும்.மனுசன் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவதற்கு பணம் அது மட்டும் தான் காரணமாக இருக்காது நிம்மதியான வாழ்க்கையை பெற வேண்டியும் தான் இருக்கும் கவலைகள் கஷ்டங்கள் அவரவர்களுக்கு ஆயிரம் இருக்கும் அந்த அத்தனையும் நினைத்து நினைத்து மனதையும் குழப்பி வந்தால் நிம்மதி எங்கே இருக்கும்.நம் கடமை நல்லதை நினனத்து நல்லதை செய்து வாழ்ந்தால் எதற்கு அஞ்ச வேண்டும் எப்...

இசையே இயக்கம் அன்றும் இன்றும்

Image
பிடித்த பாடலை கேட்க இன்று மொபைல் உட்பட பல சாதனங்கள் வந்து விட்டன எப்போது வேண்டுமென்றாலும் கேட்டு ரசிக்கலாம். பாட்டெல்லாம் நிறையா இருக்கு தம்பி எங்களுக்கு கேட்பதற்கு தான் நேரம் கிடைக்கல என்று சொல்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக கேட்கிறது இதுவே முப்பது வருடங்களுக்கு முன்னால் போனால் விரும்பிய பாடலை கேட்க நினைத்தால் கிட்டத்தட்ட ரேடியோ பெட்டிக்கு அருகே அமர்ந்து தவம் இருப்பதை போல் தான் எப்போதாவது பாடல் ஒலிக்கும் வயலும் வாழ்வும் உழவர் உலகம் நிகழ்ச்சிகள் கூட பாடல் கேட்ட இனிமை நிறைந்திருக்கும் மற்ற நேரங்களில் வானொலி தன் மொழி மறந்து தூங்கும் எல்லோரிடமும் ரேடியோ இருக்காது டேப்ரிக்கார்டரும் குறைந்த அளவே ஒலிக்கும். ஒருவர் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கும் போது தன் திசை நோக்கி இழுக்கும் யாருடைய வீட்டிலிருந்தோ ஒலிக்கும் பாடல். போகும் இடத்தை மறந்து விட்டு அந்த பாட்டு முடியும் வரை வீட்டு வாசலில் நின்றுவிட்டு போவார்.பாடல் கிடைக்காத நேரங்களில் வாய் வார்த்தை தான் வானொலி பெட்டியாக இயங்கும் மற்றபடி பாடல்களை கேட்க விரும்பினால் ஏதாவது வீட்டு விசேஷங்களில் இந்த இசையை கேட்கலாம். ஊருக்குள் திருவிழா வரு...

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

Image
இப்போது உள்ள காலகட்டத்தில் அப்பா மகன் இருவருக்கும் உள்ள பாசம் அன்பு இன்று இல்லை என்ற ஒரு மாயத்தோற்றம் தோன்றுகிறது மாயம் என்றாலே இல்லை என்று தானே அர்த்தம் இல்லாத ஒன்றை நாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை காலத்தின் மாற்றத்தால் அதன் அளவு குறைந்திருக்கலாம் அன்பே இல்லை என்று கூற முடியாது முன்பெல்லாம் இருவருக்கும் ஒரே ஊரில் வேலை இருக்கும் அதனால் அதிக நேரம் வீட்டில் பேச முடியும் இன்று அப்படி அல்ல தந்தையும் மகனும் பார்த்து பேசும் நேரம் மிகவும் குறைவு வேலை மாற்றமும் வேறு வேறு திசைகளில் பயணிக்க வைத்து விட்டது சிறு வயதில் மகன் செய்யும் தவறை கண்டித்து அடிப்பதை பார்க்கும்போது கோபப்பட்டவராக தோன்றும் ஆனால் அந்த கோபத்தில் உண்மை இருக்காது ஆத்திரம் இருக்காது பிற்காலத்தில் தன் மகன் அடுத்தவரிடம் அடி வாங்கி அவமானப்படக்கூடாது என்று மனதில் இருக்கும் பறிதவிப்பின் வெளிப்பாடு தான் அந்த அடித்து வளர்ப்பதின் அர்த்தம் பெற்றவரே பிள்ளையின் வாழ்க்கையை பாழாக்கி விடுவாரா என்ன அப்பாவுக்கும் மகனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும் அதெல்லாம் இயல்பான ஒன்றாகி விட்டது வீட்டில் இருவருக்கும் சண்டை சச்சரவு முகம் பார்த்து பேச கூட எரி...

அணைவருக்கும் பொதுவானது வாழ்க்கை

Image
இது குழந்தைகளுக்கான கதை போன்று தோன்றும் ஆனால் நல்ல விசயங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லையே ஒரு பெரிய கம்மாய் இருந்தது அதில் ஒரு மீன் ஒரு தவளை இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தன கம்மாயில் நிறையா தவளை மீன்கள் இருந்தன நம் கதையில் வருபவர்கள் இவர்கள் மட்டும் தான் மீன் அமைதியானது நல்ல குணம் உடையதாக இருக்கும் ஆனால் தவளை அதற்கு நேர் எதிர் குணம் கொண்டது யாரையும் மதிக்காது எப்போதும் தன் பெருமை பேசியே திறியும் அதிலும் குறிப்பாக தன் நண்பனான அந்த மீனின் மனதை அடிக்கடி காயப்படுத்திக்கொண்டே இருக்கும் என்னைப் பாரு நீருலையும் இருப்பேன் நிலத்திலையும் வாழ முடியும் ஆனால் உன்னால் இந்த தண்ணீரை விட்டு வெளிய வந்தால் சாவு தான் இப்படி எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும் தவளையின் கடும் சொற்களால் மீன் கொஞ்சம் வருத்தப்படும் பிறகு அறிவுரை சொல்லி பார்க்கும் அதற்கும் தவளையிடம் இருந்து கேலியும் கிண்டலும் தான் வரும் வருத்தப்பட வாய்ப்பே வராது இப்படியே பொழுது போகும் ஒருநாள் கரையோரம் ஏதோ சத்தம் கேட்கவே மீன் தண்ணீருக்கு மேலே வந்து எட்டிப்பார்த்து அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனது மனிதன் ஒருவன் மீன்பிடி வலையுடன் வந்த...

இறைவன் என்ற மனிதன் ராமன்

Image
ராமர் அரசாளப்போகும் நேரத்தில் கைகேயி தன் தந்தை தசரதன் மூலம் கானகம் நோக்கி போகச்சொன்ன போது கொஞ்சம் கூட யோசிக்காமல் கிளம்பினான் பொன்னும் பொருளையும் விட பெற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பு அதிகம் என்பதை உணர்த்திச் சென்றான் ராவணன் சீதையை சிறையெடுத்து போன பிறகு ராமன் மட்டும் நினைத்து இருந்தால் பாலம் கட்டி இலங்கை சென்று ராவணனை கொல்ல வேண்டிய அவசயம்  இல்லை. ராமன் இறைவன் அதனால் தான் நின்ற இடத்தில் இருந்தே அவனை அழித்திருப்பான் ஆனால் தான் இருக்கும் மானிட அவதாரத்தை மீறாமல் அனுமான் சுக்ரீவன் போன்ற வானரக்கூட்டங்களின் துணையோடு பாலம் கட்டி இலங்கை சென்றான் இதன் மூலம் தான் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் சுற்றி இருப்பவர்களின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் தான் எதிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறான் அங்கே போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று கடுமையாக மோதும்போது ராவணன் ஆயுதங்களை இழந்து நிற்கிறான் அப்போதும் அவனை கொல்லவில்லை போர்க்களத்தில் ஒருவருக்கு ஆயுதமே ஆயுள் போன்றது அதுவே இல்லாத ராவணனைக் கொல்வது பாவம் என்று அவனை இன்று போய் நாளை வா என்று அனுப்பி வைக்கிறான் ராவணன் சீதையை கடத்திச் சென்றத...

முயற்சியை விடாதே முன்னேறி வா

Image
ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விசயத்தில் தோற்று சோர்ந்து போய் மூலையில் அமர்ந்தால் அவர் மனசு கூட அவர் பேச்சை கேட்காது மற்றவர்கள் மட்டும் எப்படி வருவார்கள் முயற்சி இருக்கும் வரை முடிவைத் தேடி போகக்கூடாது ஒரு காட்டு வாழிப் பாதையில் சிலர் போய்க்கொண்டு இருந்தார்கள் அதில் ஒரு கண் பார்வையற்ற பிச்சைக்கார முதியவரும் பசியால் உடல் மெலிந்து மெல்ல மெல்ல குச்சியை ஊன்றிக்கொண்டு வந்தார் வரும் வழியில் பலரிடம் பிச்சை கேட்க யாரும் அவரை கவணிக்கவே இல்லை அப்போது அருகில் வந்த ஒருவன் கேலியாக சொன்னான் "என்னிடம் எதுவும் இல்ல ஆனா உங்களுக்கு எதிர்ல பக்கத்துல ஒரு மாமரத்துல நிறையா மாம்பழம் இருக்கு உங்களால மரம் ஏற தெரிஞ்சா பறித்து சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு நடந்தான் முதியவர் அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து விட்டார் பசி உயிரை பறிப்பதை போல் இருந்தது அவன் சொன்னதை நினைத்து பார்த்தார் கையால் சில கற்களை தடவி எடுத்து மாமரம் இருக்கும் திசையை நோக்கி வீசினார் பிறகு தவழ்ந்து கொண்டே தேடி பார்க்க ஒரு பழம் கூட கிடைக்கவில்லை சோர்ந்து தரையில் அமர்ந்தார் சிறிது நேரம் கழித்து எழுந்து மீ...

நிழலிலும் நிஜத்திலும் நீயா

Image
அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம் சாத்தூருக்கு மேற்கே இருக்கும் சிறிய கிராமம் பந்துவார்பட்டி பள்ளி பருவம் பாசம் மிகுந்த நண்பர்கள் எல்லாம் அங்கே தான் எங்கள் ஊருக்கு தினசரி முன்று முறை தான் பேருந்து வந்து போகும் மற்ற வாகனங்கள் எதுவும் ஊருக்குள் வராது வெளியே கிளம்பினால் பஸ்ஸை விட்டால் கால்நாடையே கைகொடுக்கும் அப்போது பொழுதுபோக்காக  இருந்தது சினிமா தான் பக்கத்து கிராமத்தில் டூரிங் டாக்கிஸ் இருக்கும் அதை விட்டால் சாத்தூர் போகனும் ஒருநாள் இரவு காட்சிக்காக நாங்க பக்கத்து வீட்டுக்காரங்க சிலரும் சேர்ந்து கிளம்பினோம் என்ன படத்துக்கு என்று நான் அப்போது கேட்கவில்லை இரவுநேரம்  என்பதால் திரும்பிய இடமெல்லாம் இருட்டு சாலையிலும் விளக்கு கிடையாது குண்டும் குழியுமான பாதையை அப்போது பார்த்தாலே பயமாகவே இருந்தது சைக்கிளில் என்னையும் தங்கையையும் உட்கார வைத்து விட்டு அப்பா சைக்கிளை உருட்டிக்கொண்டே நடக்க மற்றவர்களும் பேசிக்கொண்டே வந்தார்கள் நான் டார்ச் லைட்டை அடிக்க அந்த வெளிச்சத்தில் நடந்தோம் ஊருக்கு அருகில் சென்று விட்டோம் அப்போது சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது நாங்க ப...

தமிழ்சினிமா நினைவலைகள்

கொக்கரக்கோ இது 1983 ல் கங்கை அமரன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் நண்பர்களில் ஒருவராக நடித்த மகேஷ் இதில் கதாநாயகனாகவும் இளவரசி கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாயகன் விரும்புவதை போன்ற வழக்கமான கதை தான் ஆனால் அதை இயக்குநர் எடுத்த விதம் அருமை இன்று மட்டுமல்ல அன்றும் சென்னை பரபரப்பான இடம் தான் அதை மிக எளிமையாக அமைதியாக பதிவு செய்திருப்பார் சில்க்ஸ்மிதா சண்முகசுந்தரம் மற்றும் சிறிய வேடங்களில் நடித்து வந்த கரிக்கோல்ராஜ்க்கு இதில் முக்கிய வேடம் இப்படி நடித்த அணைவரது நடிப்பும் மிக இயல்பாக இருக்கும் இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆனால் இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை இதை கங்கை அமரனே பல நேர்காணலில் சொல்லியிருக்கிறார் படத்தின் நாயகன் மகேஷ் இதன் பிறகு படங்களில் காணமுடியவில்லை ஆனால் கதாநாயகி இளவரசி முன்னனி கதாநாயகியாக உயர்ந்தார்  இப்போது பார்க்கும்போது கொக்கரக்கோ தோல்விப்படமாக தோன்றாது கீதம் சங்கீதம் பாடல் இன்றுவரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது செ. முத்து முருகன் மதுரை

பக்தி

Image
முயற்சி என்பது நம்முடையதாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் சக்தியாக இருப்பது இறைவன் தான் கண்களுக்கு தெரியாமல் இருந்தாலும் நம்மை கவணித்துக்கொண்டு தான் இருக்கிறான் ஆண்டவனையே நினைத்துக்கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா நம்ம வாழ்க்கையை யார் பார்ப்பது என்ற கேள்வி எழுந்தால் விசயம் அதுவல்ல கடவுளை நினைத்து காரியங்கள் ஆற்றினால் வெற்றியே வந்து சேரும் மனதில் நிலையான நிம்மதி இருக்கும் கை கூப்பி வணங்கும் அணைவரையும் சோதிக்கத் தான் செய்கிறான் தன் மீது எவ்வாறு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு அப்படி இருக்கலாம் உண்மையான கடவுள் பக்தியுள்ள யாரையும் எப்போதும் இறைவன் கைவிட மாட்டான்