அணைவருக்கும் தேவையானது

தனி ஒரு மனிதனாக யாரும் வளர்ந்து முன்னேறி விட முடியாது ஒருவர் செய்யும் உதவி ஒருவரை உயர்த்தும். ஒரு விசயத்தை தானே முடிவெடுத்து தன்னால் இது முடியும் என்றாலும் அடுத்தவரின் ஆலோசனை அது இன்னும் கூடுதலான வலிமையாக இருக்கும். ஆலோசனை கூறுபவர் அதை பற்றி தெரியாதவராகவும் இருக்கலாம் ஆனால் அவர் செய்யும் உதவியானது அவருடைய பேச்சில் வார்த்தையில் என்று ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.பொருள் தருவது மட்டும் உதவியல்ல பொன்னான வார்த்தைகளை கொடுப்பதும் உதவி தான்.பலர் ஒற்றுமையாக இருந்து ஒருவரை உயர்த்துவது தான் மனித வாழ்க்கை.

ஒருவர் தானாக முன் வந்து உதவி செய்து விட்டு இன்னொரு நாளில் தனக்கு தேவையான நேரத்தில் அவர் உதவுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார் அந்த அக்கறை உதவி பெற்றவரிடம் இருக்க வேண்டும்.அடுத்தவருக்கு உதவும் குணம்  உடையவருக்கு அவர் செய்த நற்காரியங்களே அவருக்கு உதவும் கரங்களாக மாறும்

ரோட்டில் ஒருவர் அலைந்து திரிந்து போகும் வழி தெரியாமல் விழிந்துக்கொண்டிருக்கும் போது நம்மிடம் கேட்டால் நமக்கு தெரியாவிட்டால் தெரியாது என்று ஒதுங்கி விடுவோம் தெரிந்தால் எப்படி சும்மா இருக்க முடியும் அவருக்கு கை நீட்டி வழி காட்டுவோம் இது சின்ன விசயம் தான் ஆனால் அந்த இடத்திற்கு அவர் சென்ற பிறகு நிச்சயம் நினைத்து பார்த்து பெரும்உதவி செய்தது போல் தான் கருதுவார்

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஒருவர் உயரத்தை தொடும் போது ஏணியாக இருந்து அவரை ஏற்றிவிட்டவர்கள் நிச்சயம் சிலர் இருப்பார்கள்.இப்படி ஒருவருக்கொருவர் உதவியாக ஒற்றுமையாக இருந்து வாழ்ந்தால் எதிர் வரும் எதிர்காலம் எப்போது நல்ல காலமாக இருக்கும்

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்