இனிய பயண வாகனம்
புதிதாக ஒரு பொருள் வரும்போது இருக்கும் பொருளுக்கு மதிப்பு மறுக்கப்பட்டு இடத்தை காலி செய்யும் நிலமை வந்து விடும்.ஆனால் ஏகப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகும் பெருமளவு குறைந்து போனாலும் சைக்கிள் இன்னும் அழியாமல் இருப்பது ஆறுதல். அப்படி எதுவும் ஆகிவிடாது. செலவே இல்லாமல் செல்லும் இடத்திற்கு அழைத்து செல்லும் சைக்கிளை ஒழித்துக்கட்ட யாருக்கும் மனசு வராது. இதன் பயண்பாடுகள் தான் குறைந்து விட்டது.ஆனால் இதன் மேல் உள்ள பாசம் யாருக்கும் எப்பவும் குறையாது
சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியல் போடுவதை விட தீமை எதுவும் இல்லை என்று ஒரு வரியில் கூறிவிடலாம். அந்த அளவிற்கு நமக்கு பயன் தரக்கூடியது. ஆனால் அது கவணிக்கப்படாத போது செயல் இழந்து இயங்க மறுத்து முடங்கி விடுகிறது. பயனற்றுப் போகும் சைக்கிள் ரிப்பேர் கடைக்கு செல்வதற்கு பதில் பல நேரங்களில் பழைய இரும்பு கடைகளுக்கு சென்று விடும். அங்கே பரிதாபமாக அதன் பாகங்கள் பிரிக்கப்படும் ஆனாலும் பிரிந்த பாகங்கள் மீண்டும் ஒரு வகையில் சைக்கிளாக உயிர்ப்பெற்று கொண்டு தான் இருக்கின்றன
தெரிந்தவர் ஒருவர் சொன்னார் "நான் அதிக நேரம் பைக்ல போவேன் சில நேரம் பக்கத்துல எங்கயாவது போகும்போது மட்டும் சைக்கிள்ல போவேன்.அப்ப வர்றவங்க போறவங்க என்னை கேவலமா பாக்குற மாதிரி பார்ப்பாங்க ஆனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன் இதுல கேவலப்பட என்ன இருக்கு" என்று சொன்னார். அதானே சைக்கிள் அணைவரும் பயன்படுத்தக் கூடியது தானே.அதில் செல்வதால் ஏழை என்ற முத்திரை குத்தப்பட்டு விடுமா என்ன.இன்று சைக்கிள் வசதிக்காக மாறவில்லை சில வாய்ப்புகளுக்காக தான் பின்தங்கி விட்டது. வேகம் காட்ட முடியாமல் மனிதன் தன்னை மிதிக்கும் போகும் வேகமே தன் வேகமாக வாழ்ந்துவிட்டது மிதிவண்டி. பெட்ரோல் தீர்ந்து போன பைக்கும் பஞ்சர் ஆன சைக்கிளும் ஒன்று தான். உருட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும் அதில் மாற்றம் இனிமேலும் வராது.
ஒரு காலத்தில் தார்ச்சாலையில் கம்பீரமாக வலம் வந்தது இன்று ரோட்டில் ஒரு ஓரத்தில் ஊர்ந்து செல்கிறது அதன் பெல் சத்தம் கூட மற்ற வாகன இரைச்சலில் ஊமையாகி விட்டது. ஆனாலும் பல மாற்றங்களை கடந்து வந்த சைக்கிள் மறையும் காலம் என்ற ஒன்று என்றைக்கும் வராது. சைக்கிள் ஒரு இனிய பயண வாகனம்.எளிய உடற்பயிற்சி சாதனம்!

Comments
Post a Comment