தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
இப்போது உள்ள காலகட்டத்தில் அப்பா மகன் இருவருக்கும் உள்ள பாசம் அன்பு இன்று இல்லை என்ற ஒரு மாயத்தோற்றம் தோன்றுகிறது மாயம் என்றாலே இல்லை என்று தானே அர்த்தம் இல்லாத ஒன்றை நாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை காலத்தின் மாற்றத்தால் அதன் அளவு குறைந்திருக்கலாம் அன்பே இல்லை என்று கூற முடியாது முன்பெல்லாம் இருவருக்கும் ஒரே ஊரில் வேலை இருக்கும் அதனால் அதிக நேரம் வீட்டில் பேச முடியும் இன்று அப்படி அல்ல தந்தையும் மகனும் பார்த்து பேசும் நேரம் மிகவும் குறைவு வேலை மாற்றமும் வேறு வேறு திசைகளில் பயணிக்க வைத்து விட்டது
சிறு வயதில் மகன் செய்யும் தவறை கண்டித்து அடிப்பதை பார்க்கும்போது கோபப்பட்டவராக தோன்றும் ஆனால் அந்த கோபத்தில் உண்மை இருக்காது ஆத்திரம் இருக்காது பிற்காலத்தில் தன் மகன் அடுத்தவரிடம் அடி வாங்கி அவமானப்படக்கூடாது என்று மனதில் இருக்கும் பறிதவிப்பின் வெளிப்பாடு தான் அந்த அடித்து வளர்ப்பதின் அர்த்தம்
பெற்றவரே பிள்ளையின் வாழ்க்கையை பாழாக்கி விடுவாரா என்ன அப்பாவுக்கும் மகனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும் அதெல்லாம் இயல்பான ஒன்றாகி விட்டது வீட்டில் இருவருக்கும் சண்டை சச்சரவு முகம் பார்த்து பேச கூட எரிச்சலாக இருக்கலாம் ஆனால் அதெல்லாம் வீட்டிற்குள் தான் வெளியே தன் மகனைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அதை கேட்டு தலையாட்டி விட்டு போகின்ற அப்பாக்கள் இங்கு இல்லை அதே மாதிரி தன் தந்தையைப் பற்றி யாராவது மனசு நோகும்படி பேசினால் அதைக்கேட்டு சிரித்து விட்டு போகின்ற மகன்கள் இன்னும் பிறக்கவில்லை
தோளுக்கு மேல் வளர்ந்த மகனை தோழனாக வைத்து பார்ப்பது தந்தையின் கடமையாகும் அதே போல் புத்திமதிகள் வழங்குவதில் அக்கறை காட்டுவதில் மட்டும் தந்தையின் செயல்பாட்டிற்கு ஓய்வே கிடையாது
நாம் வளர்ந்து விட்டோம் இன்னும் குழந்தையாக நினைத்து கவணிக்கிறாரே என்று சில மகன்களுக்கு சலிப்பு கூட வரலாம்
அது தான் தந்தையின் பாசம்

தான் பெற்ற மகனுக்கு எழுபது வயதே ஆனாலும் தகப்பனுக்கு அவன் குழந்தையாகத் தான் தெரிவான் அது அவரின் குணம் பாசத்திற்கு வயது தேவையில்லையே
அனைத்திற்கும் மேலாக ஒன்று கண்டிப்பும் கவணிப்பும் அப்பா என்ற குடும்பத்தலைவன் இருக்கும் வரை தான் அவரின் காலத்திற்குப் பிறகு அவரைப்போல் வாழ்க்கையில் வழிகாட்ட ஒருவரும் இங்கே வர மாட்டார்கள்

Comments
Post a Comment