தமிழ்சினிமா நினைவலைகள்
கொக்கரக்கோ இது 1983 ல் கங்கை அமரன் இயக்கிய இரண்டாவது திரைப்படம்
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் நண்பர்களில் ஒருவராக நடித்த மகேஷ் இதில் கதாநாயகனாகவும் இளவரசி கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாயகன் விரும்புவதை போன்ற வழக்கமான கதை தான் ஆனால் அதை இயக்குநர் எடுத்த விதம் அருமை இன்று மட்டுமல்ல அன்றும் சென்னை பரபரப்பான இடம் தான் அதை மிக எளிமையாக அமைதியாக பதிவு செய்திருப்பார் சில்க்ஸ்மிதா சண்முகசுந்தரம் மற்றும் சிறிய வேடங்களில் நடித்து வந்த கரிக்கோல்ராஜ்க்கு இதில் முக்கிய வேடம் இப்படி நடித்த அணைவரது நடிப்பும் மிக இயல்பாக இருக்கும்
இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆனால் இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை இதை கங்கை அமரனே பல நேர்காணலில் சொல்லியிருக்கிறார் படத்தின் நாயகன் மகேஷ் இதன் பிறகு படங்களில் காணமுடியவில்லை ஆனால் கதாநாயகி இளவரசி முன்னனி கதாநாயகியாக உயர்ந்தார் இப்போது பார்க்கும்போது கொக்கரக்கோ தோல்விப்படமாக தோன்றாது
கீதம் சங்கீதம் பாடல் இன்றுவரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது
செ. முத்து முருகன்
மதுரை

Comments
Post a Comment