இறைவன் என்ற மனிதன் ராமன்


ராமர் அரசாளப்போகும் நேரத்தில் கைகேயி தன் தந்தை தசரதன் மூலம் கானகம் நோக்கி போகச்சொன்ன போது கொஞ்சம் கூட யோசிக்காமல் கிளம்பினான் பொன்னும் பொருளையும் விட பெற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பு அதிகம் என்பதை உணர்த்திச் சென்றான்

ராவணன் சீதையை சிறையெடுத்து போன பிறகு ராமன் மட்டும் நினைத்து இருந்தால் பாலம் கட்டி இலங்கை சென்று ராவணனை கொல்ல வேண்டிய அவசயம்  இல்லை. ராமன் இறைவன் அதனால் தான் நின்ற இடத்தில் இருந்தே அவனை அழித்திருப்பான் ஆனால் தான் இருக்கும் மானிட அவதாரத்தை மீறாமல் அனுமான் சுக்ரீவன் போன்ற வானரக்கூட்டங்களின் துணையோடு பாலம் கட்டி இலங்கை சென்றான் இதன் மூலம் தான் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் சுற்றி இருப்பவர்களின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் தான் எதிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறான்

அங்கே போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று கடுமையாக மோதும்போது ராவணன் ஆயுதங்களை இழந்து நிற்கிறான் அப்போதும் அவனை கொல்லவில்லை போர்க்களத்தில் ஒருவருக்கு ஆயுதமே ஆயுள் போன்றது அதுவே இல்லாத ராவணனைக் கொல்வது பாவம் என்று அவனை இன்று போய் நாளை வா என்று அனுப்பி வைக்கிறான் ராவணன் சீதையை கடத்திச் சென்றது பழிக்குப் பழி வாங்கும் செயல் போன்றது தான்

ராவணனின் தங்கை சூர்ப்பநகையின் மூக்கை ராமர் தம்பி லட்சுமணன் அறுத்தான் அதற்காக நடந்த சம்பவங்களுக்கு அவன் தான் காரணம் என்று கூறி விட முடியாது முதலில் வம்பிழுத்தது சூர்ப்பநகை ஆனால் ராவணன் தன் கோபத்தினால் சீதையை சிறையெடுத்தான்  இதையும் கூட ராமன் புரிந்திருக்கலாம் அதனால் அவன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்
இன்று போய் நாளை வா என்பதன் அர்த்தம் அப்படியும் கூட இருக்கலாம் ஆனால் ராவணன் கேட்கவில்லை மறுநாள் வந்தான் மடிந்தான்
இதன் மூலம் மறந்து மன்னிப்பது மனித பண்பு என்பதையும் உணர்த்துகிறான்
 காடு மலைகளைக் கடந்து எதிர் வந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இறைவன் வாழ்ந்து காட்டிய மனிதப் பிறவி இது
ராமாயணம் படிப்பதோடு நின்று விடாமல் ராமபிரானையும் மனதில் பதிய வைத்து நடந்தால் வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் எதிர் வரும் துன்பங்கள் யாவும் தானாக விலகிச் செல்லும் என்பது நிச்சயம்!

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்