நிழலிலும் நிஜத்திலும் நீயா

அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம் சாத்தூருக்கு மேற்கே இருக்கும் சிறிய கிராமம் பந்துவார்பட்டி பள்ளி பருவம் பாசம் மிகுந்த நண்பர்கள் எல்லாம் அங்கே தான் எங்கள் ஊருக்கு தினசரி முன்று முறை தான் பேருந்து வந்து போகும் மற்ற வாகனங்கள் எதுவும் ஊருக்குள் வராது வெளியே கிளம்பினால் பஸ்ஸை விட்டால் கால்நாடையே கைகொடுக்கும் அப்போது பொழுதுபோக்காக  இருந்தது சினிமா தான் பக்கத்து கிராமத்தில் டூரிங் டாக்கிஸ் இருக்கும் அதை விட்டால் சாத்தூர் போகனும்
ஒருநாள் இரவு காட்சிக்காக நாங்க பக்கத்து வீட்டுக்காரங்க சிலரும் சேர்ந்து கிளம்பினோம் என்ன படத்துக்கு என்று நான் அப்போது கேட்கவில்லை இரவுநேரம்  என்பதால் திரும்பிய இடமெல்லாம் இருட்டு சாலையிலும் விளக்கு கிடையாது குண்டும் குழியுமான பாதையை அப்போது பார்த்தாலே பயமாகவே இருந்தது சைக்கிளில் என்னையும் தங்கையையும் உட்கார வைத்து விட்டு அப்பா சைக்கிளை உருட்டிக்கொண்டே நடக்க மற்றவர்களும் பேசிக்கொண்டே வந்தார்கள் நான் டார்ச் லைட்டை அடிக்க அந்த வெளிச்சத்தில் நடந்தோம் ஊருக்கு அருகில் சென்று விட்டோம் அப்போது சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது நாங்க பயத்தில் அப்படியே நின்றுவிட்டோம் சாலை அகலமே பத்தடிக்குள் தான் இருக்கும் அந்த அளவுக்கு பாம்பும் நீண்டுகொண்டே போனது இருளில் டார்ச் வெளிச்சத்தில் அந்த பாம்பு படுபயங்கரமாக காட்சியளித்தது அது சாலையை கடந்த பிறகு பயத்தோடு நடந்தோம் தியேட்டர் வந்ததும் நிமிர்ந்து போஸ்டரை பார்த்தேன் அது கமல் நடித்த நீயா திரைப்படம் போஸ்டரில் பாம்பு படமெடுத்து ஆடியது அடப்பாவமே இங்கேயும் பாம்பா
பயத்தோடு தான் படம் பார்த்து முடித்தேன் ஒரே நேரத்தில் நடந்த அன்றைய நிகழ்ச்சி இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்