முயற்சியை விடாதே முன்னேறி வா

ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விசயத்தில் தோற்று சோர்ந்து போய் மூலையில் அமர்ந்தால் அவர் மனசு கூட அவர் பேச்சை கேட்காது மற்றவர்கள் மட்டும் எப்படி வருவார்கள்
முயற்சி இருக்கும் வரை முடிவைத் தேடி போகக்கூடாது
ஒரு காட்டு வாழிப் பாதையில் சிலர் போய்க்கொண்டு இருந்தார்கள் அதில் ஒரு கண் பார்வையற்ற பிச்சைக்கார முதியவரும் பசியால் உடல் மெலிந்து மெல்ல மெல்ல குச்சியை ஊன்றிக்கொண்டு வந்தார் வரும் வழியில் பலரிடம் பிச்சை கேட்க யாரும் அவரை கவணிக்கவே இல்லை அப்போது அருகில் வந்த ஒருவன் கேலியாக சொன்னான் "என்னிடம் எதுவும் இல்ல ஆனா உங்களுக்கு எதிர்ல பக்கத்துல ஒரு மாமரத்துல நிறையா மாம்பழம் இருக்கு உங்களால மரம் ஏற தெரிஞ்சா பறித்து சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு நடந்தான் முதியவர் அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து விட்டார் பசி உயிரை பறிப்பதை போல் இருந்தது அவன் சொன்னதை நினைத்து பார்த்தார் கையால் சில கற்களை தடவி எடுத்து மாமரம் இருக்கும் திசையை நோக்கி வீசினார் பிறகு தவழ்ந்து கொண்டே தேடி பார்க்க ஒரு பழம் கூட கிடைக்கவில்லை சோர்ந்து தரையில் அமர்ந்தார் சிறிது நேரம் கழித்து எழுந்து மீண்டும் கற்களை எடுத்தார் இன்னொரு முறை முயற்சி செய்து பார்த்தே ஆக வேண்டும் என்று இந்த தடவை இன்னும் வேகமாக வீசி எறிந்தார் அவர் பார்வையற்றவர் என்பதால் குறி பார்த்து எறிய முடியாது ஆனால் விடாமுயற்சியால் அந்த மாம்பழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது இப்போது அவர் மகிழ்ச்சியாக பூமியை தடவி பார்க்கவே சில மாம்பழங்கள் கிடைத்தன
இப்படித் தான் நமக்கு முன்னால் வெற்றியும் இருக்கிறது அதை பெற நம்பிக்கையும் விடா முயற்சியும் தான் வேண்டும்
தோற்றால் தான் என்ன முயற்சி தோற்கவில்லையே அது போதும் முயற்சி
முன்னேற தூண்டும்

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்