நலம் தரும் நிம்மதி

பயம் என்றாலே நம் மனதில் ஆவி போன்றவைகள் தான் வரும் அதையும் தாண்டி வாழும் வாழ்க்கையில் பல விசயங்கள் பயத்தின் பக்கம் சென்று விடுகின்றன ஏதாவது நல்லது நடக்கப்போகும் நேரத்தில் பதட்டத்தோடு சேர்த்து பயத்தையும் வரவலைக்காமல் நடப்பது நடக்கட்டும்.நம் மனதிற்கு  நல்லதே நடக்கும் என்ற முடிவை மனதில் வைத்து விட்டு நடந்தால் எந்நாளும் வாழ்க்கையில் நல்லதே நடக்கும். மனதில் நிம்மதியும் நலம் தரும்
யாராவது கோபத்தில் ஒரு கடுஞ்சொல் சொன்னால் போதும் அதனால் முதலில் பாதிக்கப்படுவது மனசு. அதனால் தான் நிம்மதியும் பறிக்கப்படுகிறது
அதனால் முதலில் மனசு பாதுகாப்போடு இருக்க வேண்டும்

எப்போதும் மென்மையாக தூய்மையாக இருக்கும் நல்ல உள்ளத்தில் நிம்மதியும் பயம் இன்றி ஊஞ்சல் கட்டி ஆடும்.மனுசன் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவதற்கு பணம் அது மட்டும் தான் காரணமாக இருக்காது நிம்மதியான வாழ்க்கையை பெற வேண்டியும் தான் இருக்கும்
கவலைகள் கஷ்டங்கள் அவரவர்களுக்கு ஆயிரம் இருக்கும் அந்த அத்தனையும் நினைத்து நினைத்து மனதையும் குழப்பி வந்தால் நிம்மதி எங்கே இருக்கும்.நம் கடமை நல்லதை நினனத்து நல்லதை செய்து வாழ்ந்தால் எதற்கு அஞ்ச வேண்டும் எப்படி நிம்மதி இல்லாமல் போகும்.எல்லாம் நம்மிடம் இருக்கிறது நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கை முதலில் இருக்க வேண்டும்.தன்னை பெருமையாக சொன்னால் தான் தவறு. தன்னைத் தானே பொறுமையாக வைத்திருப்பதில் தவறில்லை.கோபம் வரும் அதை குறைத்தால் நலம் ஆத்திரம் வரும் அடக்கி வைத்தால் இன்னும் நலம். மனதை அமைதியாக வைத்தால் நிம்மதி தானாக வரும்


நிம்மதி கிடைக்க எங்கெங்கோ போவதை விட இருக்கும் இடத்தில் அமைதியாக இருக்கலாம்.அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரலாம் தெய்வத்தால் தீராத பிரச்சனை கிடைக்காத நிம்மதி என்று எதுவும் இல்லை.மனபாரத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு கடமைகளை மட்டும் செய்து வந்தால் அதுவே போதும் மனசு மெல்ல மெல்ல நிம்மதிக்கு திரும்பும்

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்