இசையே இயக்கம் அன்றும் இன்றும்
பிடித்த பாடலை கேட்க இன்று மொபைல் உட்பட பல சாதனங்கள் வந்து விட்டன எப்போது வேண்டுமென்றாலும் கேட்டு ரசிக்கலாம். பாட்டெல்லாம் நிறையா இருக்கு தம்பி எங்களுக்கு கேட்பதற்கு தான் நேரம் கிடைக்கல என்று சொல்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக கேட்கிறது
இதுவே முப்பது வருடங்களுக்கு முன்னால் போனால் விரும்பிய பாடலை கேட்க நினைத்தால் கிட்டத்தட்ட ரேடியோ பெட்டிக்கு அருகே அமர்ந்து தவம் இருப்பதை போல் தான் எப்போதாவது பாடல் ஒலிக்கும் வயலும் வாழ்வும் உழவர் உலகம் நிகழ்ச்சிகள் கூட பாடல் கேட்ட இனிமை நிறைந்திருக்கும் மற்ற நேரங்களில் வானொலி தன் மொழி மறந்து தூங்கும்
இதுவே முப்பது வருடங்களுக்கு முன்னால் போனால் விரும்பிய பாடலை கேட்க நினைத்தால் கிட்டத்தட்ட ரேடியோ பெட்டிக்கு அருகே அமர்ந்து தவம் இருப்பதை போல் தான் எப்போதாவது பாடல் ஒலிக்கும் வயலும் வாழ்வும் உழவர் உலகம் நிகழ்ச்சிகள் கூட பாடல் கேட்ட இனிமை நிறைந்திருக்கும் மற்ற நேரங்களில் வானொலி தன் மொழி மறந்து தூங்கும்
எல்லோரிடமும் ரேடியோ இருக்காது டேப்ரிக்கார்டரும் குறைந்த அளவே ஒலிக்கும். ஒருவர் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கும் போது தன் திசை நோக்கி இழுக்கும் யாருடைய வீட்டிலிருந்தோ ஒலிக்கும் பாடல். போகும் இடத்தை மறந்து விட்டு அந்த பாட்டு முடியும் வரை வீட்டு வாசலில் நின்றுவிட்டு போவார்.பாடல் கிடைக்காத நேரங்களில் வாய் வார்த்தை தான் வானொலி பெட்டியாக இயங்கும்
மற்றபடி பாடல்களை கேட்க விரும்பினால் ஏதாவது வீட்டு விசேஷங்களில் இந்த இசையை கேட்கலாம். ஊருக்குள் திருவிழா வரும் முதல் வேலையாக கோவில் அருகில் இருக்கும் கம்பத்தில் நீண்ட குழாயை கட்டுவார்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் ஒருவர் முன்னேறி வந்து மேலே குழாய் கட்டிக்கொண்டிருப்பவரை பார்த்து இந்தாப்பா தம்பி,குழாயை எங்க ஊருப்பக்கம் திருப்பி வைப்பா நாங்களும் பாட்டு கேட்கனும் என்று கோரிக்கை வைப்பார். ஆனால் அது என்னமோ அந்த ஊரையும் தாண்டி அடுத்த ஊர் வரைக்கும் கேட்கும் இப்படித் தான் பாடல்களின் பக்கம் மனசு படையெடுத்து சென்ற காலம் அந்தக்காலம்
அன்று பாடல்களை அதிகம் கேட்க வைத்தது இலங்கை வானொலி. அதனை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களின் குரலை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும் அவர்களின் தமிழ் உச்சரிப்பு கேட்கும் பாடலின் தொடர்ச்சி போல இனிமை நிறைந்திருக்கும்.பலரின் இசை ஆர்வம் இலங்கை வானொலியில் பாடல்களை கேட்டு வளர்ந்தது என்று கூட கூறலாம்.இவைகள் தவிர வேறு வழிகளில் பாடல்களை கேட்க நினைத்தால் அது முடியாது

Comments
Post a Comment