சிரிப்போம் சிந்திப்போம்
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் அப்படினு சொல்லுவாங்க.சிரிப்பு அந்த புன்னகை இல்லாத போது அந்த இடமே ஒருவித அசாதரமான சூழ்நிலையாகவே மாறிவிடும் நகைச்சுவை என்பது யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது ஒருவருடைய குறையை சுட்டிக்காட்டி கேலி செய்து சிரிக்க வைப்பது என்பது மிகப்பெரிய கேவலம்.அப்படித் தான் சிரிக்க வைக்க வேண்டுமா என்ன.நகைச்சுவை என்பது அருமருந்து அது விஷமாகிவிடக் கூடாது
நமக்கு தெரியாதவங்க சிலபேரு உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பாங்க அந்த கூட்டத்துல தெரிந்தவர் ஒருத்தரும் இருப்பார் அவரை பார்த்ததும் நாம் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே அருகில் சென்றால் அவரும் சிரித்தபடி வரவேற்பார் அருகில் இருப்பவர்களும் புன்னகைத்து பார்ப்பார்கள் அதற்கு பதிலாக நாம் அவரை கிண்டல் செய்யும் விதமாக நக்கலாக சிரித்துக்கொண்டே போனால் அப்புறம் அவ்வளவு தான் கரகாட்டக்காரன் படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி அது "எப்படிடா என்னப் பாத்து சிரிச்ச இத்தன பேரு இருக்காங்களே சிரிக்கக் கூடாதா"னு கேட்டு சண்டைக்கு வந்து விடுவார்.அதனால் இப்படிப்பட்ட சிரிப்புக்களை தவிர்த்து விடுவது நல்லது
இப்படித் தான் மகாபாரதத்தில் துரியோதணன் கீழே கவணிக்காமல் செல்லும் போது கால் இடறி வழுக்கி விழுந்து விட்டான்.இதை அந்த வழியாக வந்த பாஞ்சாலி பார்த்ததும் கேலி செய்வது போல சிரித்து விட்டாள்.சும்மாவே துரியோதணன் சிடுமூஞ்சிக்காரன் அந்தப் பொண்ணு சிரிப்பதை பார்த்ததும் ஏதோ தான் அவமானப்பட்டது போல் நினைத்து அவள் மேல் பயங்கரமாக கோபம் வந்து விட்டது.மகாபாரதப்போர் வருவதற்கு பாஞ்சாலியின் இந்த சிரிப்பும் ஒரு காரணம் என்று கூட கூறுவார்கள்.சிரிப்பு தானே என்று நினைத்தாலும் அதுவும்சில சமயம் சிக்கலை ஏற்படுத்தி விடும்
ஒரு படிக்கிற பையன் பரிட்சையில் பெயிலாகி விட்டான். அப்பாவிடம் சொல்ல வேண்டும். நினைக்கும் போதே அவன் மனசு பதறியது.தயங்கிபடி வீட்டிற்குள் சென்றான் அப்பா உள்ளே உட்கார்ந்து இருந்தார்.அவருக்கு அருகில் சுவற்றில் அவருடைய பெல்ட் இருந்தது.எடுத்து அடிச்சார்னா தாங்க முடியாது பின்னியெடுத்து விடுவார்.அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.அவர் முன்னாடி முழித்துக்கொண்டு நின்றான். இதை கவணித்தவர் என்னடா விசயம் அதட்டியபடி கேட்டார்.அவன் கண் கலங்கியபடியே பரிட்சையில் பெயிலாகி விட்டதை சொன்னான்.அப்பா எழுந்து அவன் அருகில் வந்தார்.லேசா அவன் தலையை தட்டி "போடா உனக்கு வேற வேலையே இல்ல வருச வருசம் இதையே சொல்லிக்கிட்டு, அடுத்த வருசமாவது பாஸ் பண்ணப்பாருனு சொல்லிட்டு போனார் அவனுக்கு ஒன்னும் புரியல.அடித்து துவைத்து விடுவார்னு நினைச்சா அன்பா சொல்லிடு போறாரே என்று நினைத்து மனதிற்குள் சிரித்து விட்டான்.அடுத்த நிமிடம் அடிக்க வேண்டிய அப்பா இப்போது கண்டிப்பாக தன்னால் வேதனனப்பட்டிருப்பார் அவர் அடிக்கும் இருக்கும் வலியை விட இப்போது வலித்தது.அதனால் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.இந்த வகையான சிந்தனையும் சிரிப்பும் மிகச்சிறந்தது.அதனால் அணைவரும் சிரிப்போம் சிந்திப்போம் சிறந்து வாழ்வோம்!

Comments
Post a Comment