Posts

Showing posts from November, 2018

பணமா நல்ல குணமா

Image
பணம் பத்தும் செய்யும். அது பாதாளம் வரை பாயும் என்று பணத்தைப் பற்றி பல பெருமைகளை கூறுவார்கள் அது என்னவோ உண்மை தான். ஆனால் பாதாளம் வரை பாயும் பணத்தை விட அதன் மீது பற்றில்லாத நல்லவர்களின் குணம் அதை விட ஆழமாக பாயும்.நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் ஒருவர் சேர்க்கும் பணம் அவரை காப்பற்றுவதற்கு மட்டுமே இருக்க வேண்டும். அது அவருக்கும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்.ஆனால் அந்த பணத்தை அவர் காப்பாற்றும் நிலை வரும் தான் அந்த நிம்மதி மனதை விட்டு வெளியேறி விடும் மனநிம்மதி போன பிறகு எத்தனை கோடி பணம் சேர்த்து என்ன பயண். மனித குணம் எப்போதும் உயர்ந்தது. சேரும் பணம் உயரும் வரையே உச்சத்தில் இருக்கும். ரோட்டில் யாரோ ஒருவர் தவறவிட்ட பணம் கட்டாக கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவன் கண்டெடுத்தான். தானாக வந்தது வீனாக ஏன் விடனும் என்ற பேராசை அவன் மனதில் பற்றியெறிய எடுத்துச் சென்றான். வீட்டில் பதுக்கி வைப்பதை விட நிலத்தில் புதைத்து வைப்பது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து வீட்டுக்கு வெளியே குழி தோண்டி புதைத்து விட்டு வந்தான். சிறிது நேரம் கழித்து மூடிய பள்ளத்தை தோண...

சொற்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல் வருமா

Image
இது என்ன ஊருப்பா ஒரு வசதியும் இல்ல. நீங்கல்லாம் எப்படித்தான் இருக்கிங்களோ. என்று வெளியூர்க்காரர் புலம்பி விட்டு போவார். ஆனால் அங்கே குடியிருப்பவர்கள் சொற்க்கத்துக்கே போய் வந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊர் போல் இருக்காது அப்படித்தான் எனக்கு என் ஊரும் கடைக்காரரிடம் இருபது பைசா கொடுத்தால் பதிலுக்கு அவர் கைநிறையா மிட்டாய் கொடுத்த காலம் அது. ஊருக்குள் செல்வதற்கு முன் அதன் எல்லையிலியே நீண்ட பெரிய ஆலமரம் இருக்கும். அதை ஒட்டி ஒரு கம்மாய் அதுவும் பெரியது தான்.எதிரே மிக அருகில் ஒரு பள்ளிக்கூடம் தொடக்கப்பள்ளி தான்.மேற்கொண்டு படிக்க வேண்டுமென்றால் அடுத்த ஊருக்கு போகனும். பேருந்து வசதி இருக்காது. அதனாலயே முக்கால்வாசி பேர் அதோடு முடித்து விடுவார்கள். நல்லவேளையாக எனது பள்ளிப் பயணம் பக்கத்து ஊர் வரை நீண்டது. இப்படி படிப்பை பாதியில் நிறுத்திய பசங்க மரம் வெட்ட,மாடு மேய்க்கனு கிளம்பிடுவாங்க. எங்க ஊரு ஒரு காலத்தில் விவசாய நிலம் தான். காலம் செல்லச்செல்ல மழை தண்ணி இல்லாமல் பூமி வரண்ட நிலமாக மாறி விட்டது. வெகு சிலரே விவசாயம் செய்து வந்தனர். சின்னஞ்சிறிய கிராமம் என்றாலும் ஊரைச் சுற்றி ஏராளமான கிணறுகள் இ...

நன்றியுள்ள ஜீவன்

Image
ரோட்டில் அனாதை போல் ஆங்காங்கே சுற்றித் திரிந்துகொண்டிருந்தாலும் அதற்கு நண்பர்களாக  பக்கத்து தெருவிலும் அடுத்த தெருவிலும் ஏராளம் உண்டு. தன் கூட்டத்தில் ஒன்றுக்கு சின்ன அடிபட்டாலும் அனைத்தும் ஆதரவாக சேர்ந்து கொண்டு யாரையோ திட்டுவது போல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணும். இப்படி தன் இனத்திற்கு மட்டுமல்ல அதன் மீது அன்பு செலுத்தும் அனைத்து மனிதர்களுக்கும் நாய் நன்றியுள்ள ஜீவன் தான். ஒருவர் அதற்கு ஒரு முறை அன்போடு உணவு வைத்தாலும் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறை அவர் அதனை கடந்து செல்லும் பொழுதெல்லாம் நன்றியுடன் வாலாட்டி வரவேற்கும் நாய்கள் தன்னை வளர்ப்பவர்களுக்கு காவலன் கொள்ளையர்களுக்கு காலன். குறைக்கிற நாய் கடிக்காதுனு சொல்வாங்க. அது முதலில் எச்சரிக்கை கொடுக்கவே குறைக்கிறது.அதை மீறும்போது தான் குறைக்கிற நாயும் கடிக்கும். ஊளையிடும் நாய்கள் ஆகாது.அது அபசகுணம் என்றும் கூறப்படுகிறது.உண்மையில் அது அபசகுணம் அல்ல,தன் உடலில் ஏதோ பாதிப்பு வந்ததை அடுத்தவருக்கு உணர்த்தவே ஊளையிடுவதாக கூறுகிறார்கள். கதவுகள் ஒரு வீட்டிற்கு பாதுகாப்பு என்றாலும் கதவின் பக்கத்தில் நிற்கும் நாய் அந்த வீட்டிற்கு பாதுகாவலன்....

அண்ணன் தம்பிகள் அன்பின் முகவரிகள்

Image
தமிழ் சினிமா தோன்றிய காலம் முதல் இப்போது வரை அண்ணன் தம்பி பாசத்தை வைத்து வந்த பாடல்கள் ஏராளம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முதல் பாடலாக இருப்பது அன்புசகோதரர்கள் படத்தில் வரும் முத்துக்கு முத்தாக என்ற இந்த பாடலாகத் தான் இருக்கும். அதில் வரும் வரிகள் மற்றும் அதற்கு ஏற்ற மாதிரி நான்கு அண்ணன் தம்பிகளாக நடித்த ரங்காராவ் மேஜர்சுந்தராஜன் ஏவிஎம்ராஜன் ஜெய்சங்கர் இவர்களின் இயற்கையான நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கும் அதில் வரும் பாடல் வரிகளாக வருவது. தந்தை முகம் பார்க்காத தம்பிகள் படிப்பறிவு இல்லாத தாய் பாடிய தாலாட்டு பாடல் தான் நாங்கள் கேட்ட பாடல் அதைத் தவிர வேறு பாடல் எதுவும் எங்களுக்கு தெரியாது. இப்படி துன்பம் நிறைந்த காலத்தில் எல்லாம் அறிந்து தானாக படித்து முன்னேறினான் என் தம்பி. இந்த வயதான காலத்தில் நான் அவனை நம்பியே வாழ்கிறேன் அடுத்ததாக. நான் வளர்த்த தம்பிகள் என்னுடைய  வார்த்தைகளை  பெற்ற தாயைப் போல நினைத்து வேதவாக்காக.கேட்டு வந்தார்கள். நானும் அவர்களை தெய்வம் போல காவல்காத்து வந்தேன் இத்தனைக்கும் நடுவே கடைசி தம்பி மட்டும் செல்லமாக வளர்ந்து வந்தான். இப்படி ஒன்றுபட்ட எங்கள் இ...

கண்ணனும் கர்ணனும்

Image
மகாபாரதம் என்றதும் நிணைவிற்கு வருவது பாண்டவர்கள் அடுத்து கௌரவர்கள்.  இவர்களையும் மீறி நம் மனதிற்கு வருவது என்றால் அது கர்ணனாகத் தான் இருக்கும். ஆனால் அவன் இருந்த இடம் துரியோதணன் பக்கம் என்பதால் அவனை பாண்டவர்கள் பக்கம் கொண்டு வர பகவான் கிருஷ்ணர் பெரும் முயற்சி செய்தார். காரணம் பஞ்சபாண்டவர்கனை போரில் வீழ்த்தும் வலிமை கர்ணனுக்குத் தான் இருந்தது. ஆனாலும் அவனை கொல்வது கிருஷ்ணருக்கு பெரிய விசயமே இல்லை. கர்ணன் மிகச்சிறந்த மாவீரன்.கேட்க கேட்க கொடுக்கும் குணம் படைத்தவன் அது மட்டுமல்ல உலகத்திற்கே ஒளி கொடுக்கும் சூரியனுடைய மகன். அதனால் துரியோதணனோடு இருப்பதை விட பாண்டவர்களோடு சேர்வதால் அவர்களும் பிழைப்பார்கள் கர்ணனும் காப்பாற்றப்படுவான் என்று தான் நிணைத்தார் ஒருநாள் கர்ணன் சூரியதேவனன நோக்கி வழிபடும்போது அவன் முன்னால் தோன்றிய சூரியதேவன் உனக்கு ஆபத்து வரப்போகிறது,இந்திரன் உன்னுடைய கவசகுண்டலங்களை தானமாக பெற வருவான் நீ கொடுத்துவிடாதே என்று எச்சரித்தான். அதற்கு கர்ணனோ யார் வந்து என்ன கேட்டாலும் கொடுத்து விடுவேன் அதை மாற்ற மாட்டேன் என்று மறுத்தான். உடனே சூரியதேவன் மீண்டும் அப்படியென்றால் நீ பதிலு...

ஏமாற்றுக்காரனும் ஒருநாள் ஏமாறுவான்

Image
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று சொல்வார்கள். யாராவது வேண்டுமென்றே ஒருவரிடம் ஏமாற வேண்டும் என்ற தலையெழுத்தா இருக்கப்போகிறது. சூழ்ச்சி செய்து நயவஞ்சகமாக பேசி ஏமாற்றுபவர்களை எல்லா நேரத்திலும் கண்டுபிடிக்க முடியாது. பணமோ பொருளோ ஒருவரிம் கைப்பற்றுவதே அவர்கள் நோக்கமாக இருக்கும். ஆனால் தூய அன்பை மட்டுமே காட்ட தெரிந்த நல்லவர்களுக்கு இவர்களை கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். அது என்னமோ இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை ஏதோ முட்டாள் தனமான காரியத்தை செய்து விட்டதை போலவும் அப்படிப்பட்ட சதிகாரர்களை புத்திசாலி போலவும் பார்க்கப்படுகிறது. ஏமாந்த பிறகு அவர்களிடமே நியாயம் கேட்டால் நீதிமான் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்.ஏமாந்தது உன் தப்பு என்னை குற்றம் சொல்கிறாயா என்று திட்டி அனுப்பி விடுவார்கள். பணமும் பொருளும் பறிபோன பிறகு இப்படி ஏமாந்து விட்டோமே என்ற வேதனனயோடு தான் சிலர் காலம் தள்ளுகிறார்கள் அதை மீட்க வேறு வழியே இல்லை என்று முடிவு செய்து விடுகிறார்கள். போனது திரும்ப கிடைக்கும்,அதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்கின்ற நம்பிக்கை மனதில் இருக்கும் வரை ஏமாந்தவர்கள் யாரும...