கண்ணனும் கர்ணனும்
மகாபாரதம் என்றதும் நிணைவிற்கு வருவது பாண்டவர்கள் அடுத்து கௌரவர்கள். இவர்களையும் மீறி நம் மனதிற்கு வருவது என்றால் அது கர்ணனாகத் தான் இருக்கும். ஆனால் அவன் இருந்த இடம் துரியோதணன் பக்கம் என்பதால் அவனை பாண்டவர்கள் பக்கம் கொண்டு வர பகவான் கிருஷ்ணர் பெரும் முயற்சி செய்தார். காரணம் பஞ்சபாண்டவர்கனை போரில் வீழ்த்தும் வலிமை கர்ணனுக்குத் தான் இருந்தது. ஆனாலும் அவனை கொல்வது கிருஷ்ணருக்கு பெரிய விசயமே இல்லை. கர்ணன் மிகச்சிறந்த மாவீரன்.கேட்க கேட்க கொடுக்கும் குணம் படைத்தவன் அது மட்டுமல்ல உலகத்திற்கே ஒளி கொடுக்கும் சூரியனுடைய மகன். அதனால் துரியோதணனோடு இருப்பதை விட பாண்டவர்களோடு சேர்வதால் அவர்களும் பிழைப்பார்கள் கர்ணனும் காப்பாற்றப்படுவான் என்று தான் நிணைத்தார்
ஒருநாள் கர்ணன் சூரியதேவனன நோக்கி வழிபடும்போது அவன் முன்னால் தோன்றிய சூரியதேவன் உனக்கு ஆபத்து வரப்போகிறது,இந்திரன் உன்னுடைய கவசகுண்டலங்களை தானமாக பெற வருவான் நீ கொடுத்துவிடாதே என்று எச்சரித்தான். அதற்கு கர்ணனோ யார் வந்து என்ன கேட்டாலும் கொடுத்து விடுவேன் அதை மாற்ற மாட்டேன் என்று மறுத்தான். உடனே சூரியதேவன் மீண்டும் அப்படியென்றால் நீ பதிலுக்கு இந்திரனிடம் தானமாக சக்தி அஷ்திரத்தை கேளு அது உன் உயிரை காப்பாற்றும் என்று சொல்லி மறைந்தார். மறுநாள் அவர் சொன்னது போலவே இந்திரன் அந்தணர் வேடமிட்டு தானம் கேட்டதும் கர்ணன் வந்தது இந்திரன் தான் என்று புரிந்துகொண்டான். நீங்க நேரில் வந்து கேட்டாலே கொடுத்திருப்பேனே இப்படி வேஷம் போட்டு தான் வர வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே தன் உடலில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட கவச குண்டலங்களை பிய்த்துக்கொடுத்தான். அது தான் கர்ணன். இதைக் கொடுத்தால் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்த பிறகும் கூட தானம் தர்மம் செய்வது தன் உயிரை விட பெரியது என்று வாழ்ந்து வந்தான்
கண்ணன் கர்ணனை சந்தித்து நீ மிகவும் நல்லவன் ஆனால் இருக்குமிடம் நல்ல இடம் அல்ல. அதனால் நீ எங்கள் பக்கம் வந்துவிடு நடக்கப்போகும் போரிலும் கலந்துகொல்லாதே என்றார். அதற்கு கர்ணனோ நான் அவமானப்பட்ட நேரத்தில் ஒரு நாட்டையே கொடுத்து அழகு பார்த்தவன் துரியோதணன். என் நண்பனை விட்டு வர மாட்டேன் என்றான். கண்ணன் ஏமாற்றத்தோடு சென்றார் ஆனாலும் அவர் மனசு கேட்கவில்லை. கர்ணனின் தாயான குந்தி தேவியை கர்ணனை பார்க்க அனுப்பினார் தன் தாயை பார்த்தாவது மனசு மாறி வருவான் என்று நம்பினார் அதற்கும் அவன் இறங்கி வரவில்லை அதற்குள் மகாபாரத போரும் வந்துவிட்டது.
பாண்டவர்களின் பக்கம் உள்ள பல வீரர்களை கொன்று குவித்தான்.தருமர் பீமன் நகுலன் சகாதேவன் ஆகியோர் கர்ணனை எதிர்த்து போரிட முடியாமல் பயந்து ஓடினர். கடைசியாக அர்ஜுணனும் கர்ணனும் பயங்கரமாக மோதிக்கொண்டார்கள். அப்போது கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து நகராமல் நிற்கவே கர்ணன் கீழே இறங்கி அதை சரிசெய்து கொண்டிருந்தான். அர்ஜுனனும் அதை வேடிக்கை பார்த்தான். அப்போது தான் கண்ணன் அவனிடம் இப்போது நீ கர்ணனை அம்பெய்து கொல்லு இது தான் சரியான நேரம் என்று சொல்லவே அர்ஜுனனுக்கு அதிர்ச்சி தேரை விட்டு கர்ணன் கீழே நிற்கிறான் இப்படி கொல்வது பாவம் அது தர்மம் ஆகாது நான் கொல்ல மாட்டேன் என்றான். அதற்கு கண்ணன் இவன் துரியோதனோடு சேர்ந்து பல தீமைகளை செய்தான்.உன் மகனையும் இப்படித்தான் கொன்றார்கள் அதில் இந்த கர்ணனும் ஒருவன் என்று தூண்டிவிடவே அர்ஜுனனுக்கு கோபம் பொங்கியது அதனால் கர்ணன் எதிர்பாராத நேரத்தில் அவனை அம்பு எய்து கொன்றான். இப்படித்தான் கர்ணனை காக்க நினைத்த கிருஷ்ணரே அவன் சாவுக்கு காரணமாகி விட்டார்.

Comments
Post a Comment