சொற்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல் வருமா

இது என்ன ஊருப்பா ஒரு வசதியும் இல்ல. நீங்கல்லாம் எப்படித்தான் இருக்கிங்களோ. என்று வெளியூர்க்காரர் புலம்பி விட்டு போவார். ஆனால் அங்கே குடியிருப்பவர்கள் சொற்க்கத்துக்கே போய் வந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊர் போல் இருக்காது அப்படித்தான் எனக்கு என் ஊரும்

கடைக்காரரிடம் இருபது பைசா கொடுத்தால் பதிலுக்கு அவர் கைநிறையா மிட்டாய் கொடுத்த காலம் அது. ஊருக்குள் செல்வதற்கு முன் அதன் எல்லையிலியே நீண்ட பெரிய ஆலமரம் இருக்கும். அதை ஒட்டி ஒரு கம்மாய் அதுவும் பெரியது தான்.எதிரே மிக அருகில் ஒரு பள்ளிக்கூடம் தொடக்கப்பள்ளி தான்.மேற்கொண்டு படிக்க வேண்டுமென்றால் அடுத்த ஊருக்கு போகனும். பேருந்து வசதி இருக்காது. அதனாலயே முக்கால்வாசி பேர் அதோடு முடித்து விடுவார்கள். நல்லவேளையாக எனது பள்ளிப் பயணம் பக்கத்து ஊர் வரை நீண்டது. இப்படி படிப்பை பாதியில் நிறுத்திய பசங்க மரம் வெட்ட,மாடு மேய்க்கனு கிளம்பிடுவாங்க. எங்க ஊரு ஒரு காலத்தில் விவசாய நிலம் தான். காலம் செல்லச்செல்ல மழை தண்ணி இல்லாமல் பூமி வரண்ட நிலமாக மாறி விட்டது. வெகு சிலரே விவசாயம் செய்து வந்தனர்.


சின்னஞ்சிறிய கிராமம் என்றாலும் ஊரைச் சுற்றி ஏராளமான கிணறுகள் இருப்பதால் விவசாயம் கொடி கட்டி பறந்ததாகவே தெரிகிறது. ஆனால் அன்றைய காலத்தில் ஊரைச் சுற்றி கருவேலம் நிறைந்திருந்திருந்தால் வயல்வெளி எங்கும் கருவேலம் மரங்களே இருந்தன. அதனால் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் கூட அடுத்தவர் நிலத்தில் வேலை பார்த்து வந்தனர் அது போக தீப்பொட்டி ஆபிஸ் முக்கிய தொழிலாக மாறியதால் வறுமை வரவில்லை



குளிக்க அதிகமானோர் பயண்படுத்தியது ஊருக்கு தெற்கு பக்கம் இருந்த கிணற்றை தான். அந்த பகுதியில் விவசாயம் நடைபெற்றதால் தினமும் பம்பு செட்டில் இருந்து நீண்ட வாய்க்கால் வழியாக தண்ணிர் தோட்டத்திற்கு போகும் அதனால் வசதியாக இருக்கும் வயசு பசங்க நீச்சலடிப்பதற்கு உதவியாக இருந்ததும் அது தான்.  பசங்க கிணற்று மேலிருந்து குதிப்பார்கள். படிக்கட்டுகள் உடைய அகன்ற கிணறு அது. நான் அதன் மேல் படிக்கட்டில் அமர்ந்து அவர்கள் குதித்து விளையாடும் விளையாட்டை பார்ப்பதோடு சரி. கிணற்றில் குதித்து விளையாட மாட்டேன். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது.
இப்படித்தான் ஒருநாள் கம்மாயில் குளித்துகொண்டிருக்கும் போது கவணிக்காமல் ஆழமான பகுதிக்கு சென்று விட்டேன். தண்ணீர் தலையை மூழ்கடிக்கவே கையை உயர்த்தி கத்தி பார்த்தும் பலணில்லை யாரும் அங்கு இல்லை. அந்த கடைசி நிமிடத்தில் ஒரு யோசனை தோன்றவே அதன்படி தண்ணீருக்குள் இருந்து சாய்வலாக தவளையைப் போல் வேகமாக ஒரே தாவல். ஆழத்தில் இருந்து மேடான பகுதிக்கு மாறி தப்பித்தேன். இது தான் நடக்க வேண்டுமென்று விதி முடிவெடுத்தாலும் அதை மாற்றும் வலிமை மனிதனுக்கு உண்டு.

நத்தைகள் மெல்ல ஊர்ந்து செல்வதை பார்க்கும்போது அழகாக தோன்றும். தட்டான்களும் வண்ணாத்துப்பூச்சிகளும் செடிகளுக்குள் புகுந்து விளையாடும் அதுவும் ஓர் அழகு. போகும் பாதையில் நெளிந்து வரும் பாம்புகள் பயங்காட்டும். ஆனால் பயப்பட தேவையில்லை. அப்போது  எங்கிருந்தோ வரும் கீரிப்பிள்ளைகள் துணையாக நின்று படை நடுங்கும் அந்த பாம்புகளையே பயந்து ஓட வைக்கும்
பட்டிக்காட்டுப் பயணம் இதோடு முடியாது இன்னும் வரும்

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்