அண்ணன் தம்பிகள் அன்பின் முகவரிகள்

தமிழ் சினிமா தோன்றிய காலம் முதல் இப்போது வரை அண்ணன் தம்பி பாசத்தை வைத்து வந்த பாடல்கள் ஏராளம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முதல் பாடலாக இருப்பது அன்புசகோதரர்கள் படத்தில் வரும் முத்துக்கு முத்தாக என்ற இந்த பாடலாகத் தான் இருக்கும். அதில் வரும் வரிகள் மற்றும் அதற்கு ஏற்ற மாதிரி நான்கு அண்ணன் தம்பிகளாக நடித்த ரங்காராவ் மேஜர்சுந்தராஜன் ஏவிஎம்ராஜன் ஜெய்சங்கர் இவர்களின் இயற்கையான நடிப்பும் மிகப் பொருத்தமாக இருக்கும்

அதில் வரும் பாடல் வரிகளாக வருவது. தந்தை முகம் பார்க்காத தம்பிகள் படிப்பறிவு இல்லாத தாய் பாடிய தாலாட்டு பாடல் தான் நாங்கள் கேட்ட பாடல் அதைத் தவிர வேறு பாடல் எதுவும் எங்களுக்கு தெரியாது. இப்படி துன்பம் நிறைந்த காலத்தில் எல்லாம் அறிந்து தானாக படித்து முன்னேறினான் என் தம்பி. இந்த வயதான காலத்தில் நான் அவனை நம்பியே வாழ்கிறேன்


அடுத்ததாக. நான் வளர்த்த தம்பிகள் என்னுடைய  வார்த்தைகளை  பெற்ற தாயைப் போல நினைத்து வேதவாக்காக.கேட்டு வந்தார்கள். நானும் அவர்களை தெய்வம் போல காவல்காத்து வந்தேன் இத்தனைக்கும் நடுவே கடைசி தம்பி மட்டும் செல்லமாக வளர்ந்து வந்தான். இப்படி ஒன்றுபட்ட எங்கள் இதயம் ஒருநாள் கூட பிரிந்து போனது இல்லை

அடுத்ததாக. எந்த கவலையும் இன்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது யாரென்றால் அது அந்த நாட்டை ஆளும் அரசனாகத் தான் இருக்கும். ஆனால் எங்களின் இன்பத்தை அந்த ராஜா கூட பார்க்க முடியாது. சிறிய குடிசை வீடோ உயர்ந்து நிற்கும் வசந்தமாளிகையோ எதுவாக இருந்தாலும் அதை தாங்கி நிற்பது அந்த நான்கு கால் தூண்கள் தான். அது போல எங்களின் சொந்தம் இருக்கும். ரோஜாக்களின் நறுமணம் போலவே எங்களிடம் வாசம் இருக்கும். இப்போது மட்டுமல்ல இன்னும் நூறு வருசம் ஆனாலு இந்த பாசம் மாறாமல் அப்படியே இருக்கும்

இப்படி மாதிரி கதைக்கு ஏற்ற மாதிரியே பாடல் வரிகளை ஒரு கதை போலவே வடிவமைத்து இருந்தார் இதை எழுதிய கவியரசர் கண்ணதாசன். இசையமைத்தவர் திரைஇசைத் திலகம் கேவி மகாதேவன் அவர்கள். லஷ்மிதீபக் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தயாரித்தவர் ஜெயந்தி பிலிம்ஸ் சார்பாக என்.கனகசபை அவர்கள். 1973 ம் ஆண்டு மே மாதம் 4 ந்தேதி இந்தப்படம் வெளிவந்தது. அன்று முதல் இன்று வரை இந்த பாடல் அணைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து கேட்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த பாடலை பாடிய பின்னனி பாடகர் கண்டசாலாவும் பாடலில் மூத்த அண்ணனாக தோன்றி நடித்த ரங்காராவ் ம் இந்தத் திரைப்படம் வரும்போது உயிரோடு இல்லை. இருவரும் மறைந்து விட்டனர். அதனால் தானோ என்னவோ மகிழ்ச்சியான இன்பமான இந்த பாடலை கேட்கும்போது கொஞ்சம் துன்பமும் சேர்ந்து ஒலிப்பது போலவே இருக்கும்.



Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்