பணமா நல்ல குணமா

பணம் பத்தும் செய்யும். அது பாதாளம் வரை பாயும் என்று பணத்தைப் பற்றி பல பெருமைகளை கூறுவார்கள் அது என்னவோ உண்மை தான். ஆனால் பாதாளம் வரை பாயும் பணத்தை விட அதன் மீது பற்றில்லாத நல்லவர்களின் குணம் அதை விட ஆழமாக பாயும்.நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் ஒருவர் சேர்க்கும் பணம் அவரை காப்பற்றுவதற்கு மட்டுமே இருக்க வேண்டும். அது அவருக்கும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்.ஆனால் அந்த பணத்தை அவர் காப்பாற்றும் நிலை வரும் தான் அந்த நிம்மதி மனதை விட்டு வெளியேறி விடும் மனநிம்மதி போன பிறகு எத்தனை கோடி பணம் சேர்த்து என்ன பயண். மனித குணம் எப்போதும் உயர்ந்தது. சேரும் பணம் உயரும் வரையே உச்சத்தில் இருக்கும்.





ரோட்டில் யாரோ ஒருவர் தவறவிட்ட பணம் கட்டாக கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவன் கண்டெடுத்தான். தானாக வந்தது வீனாக ஏன் விடனும் என்ற பேராசை அவன் மனதில் பற்றியெறிய எடுத்துச் சென்றான். வீட்டில் பதுக்கி வைப்பதை விட நிலத்தில் புதைத்து வைப்பது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து வீட்டுக்கு வெளியே குழி தோண்டி புதைத்து விட்டு வந்தான். சிறிது நேரம் கழித்து மூடிய பள்ளத்தை தோண்டி பார்க்க அங்கே பணம் இல்லை. அந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவன் மனநோயாளியாக கண் விழித்தான். அவன் பூமியில் புதைப்பதை தூரத்தில் மறைந்து நின்று பார்த்த பணத்தாசை பிடித்த ஒருவன் அதை எடுத்து ஓடிவிட்டான். அப்போது அவனுக்கு எதிரே வந்த ஒரு திருடன் கத்தியைக் காட்டி மிரட்டவே இவன் தர மறுத்தான். திருடன் கத்தியால் அவனை காயப்படுத்தி விட்டு அந்த பணத்தை பறித்துச் சென்றான்.

ரோட்டில் அந்த திருடன் கொஞ்சம் கூட பயப்படாமல் பணம் எவ்வளவு இருக்கும் என்று அதை எண்ணிக்கொண்டே நடந்தான். அப்போது எதிரில் வந்த வாகனம் அவன் மீது மோதி கடந்து சென்றது. அவன் கையில் இருந்த பணம் ஏதோ விடுதலை பெற்றதைப் போல காற்றில் பறந்தன.
இவர்கள் யாருக்கும் அந்த பணம் சொந்தம் இல்லை. ஆனால் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தது தான், அந்த பேராசை தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.

வாழ்க்கையில் அணைவருக்கும் தேவையானது பணம். அது உழைப்பிற்கு கிடைக்கும் பரிசு.  பணத்தின் மீது பற்று ஆசை விருப்பம் என்று இப்படி இருப்பவருக்கு எந்த கவலையும் பிரச்சனையும் இல்லை. பணம் அணைவரும் விரும்பக்கூடிய ஒன்று தான். ஒருவருக்கு பணத்தின் மீது இருக்கும் ஆசை பணவெறியாக மாறும்போது தான் அவர் வாழ்க்கையிலும் மாற்றம் தடுமாற்றம் எல்லாம் ஏற்படுகிறது. வெல்லவே முடியாதது வீழ்த்தவே முடியாதது அல்ல பணம். ஒருவரின் நல்ல குணம் அதை அடக்கி ஆளும்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்