தமிழ் திரைப் பக்கம்
என்னதான் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் ஒரு சில தோல்வி படங்களை கொடுக்கும் போது தமிழ் சினிமா அவர்களை ஒதுக்கி ஓரத்தில் உட்கார வைத்து விடும். அல்லது கதாநாயகன் என்ற இடத்தை பறித்து விடும். இதில் ஒரு சிலரை தவிர மற்ற அணைவருக்கும் இதே நிலை தான். ஆனாலும் முழுமையாக தமிழ் சினிமாவை இப்படி குறை கூற முடியாது. அதற்கு காரணம் மிகக்குறைவு தான். கால மாற்றத்தினால் தான் அதிகமாக ஏற்படுகிறது என்று கூறலாம்.
அறிமுகமானது நலந்தானா திரைப்படம். ஆனால் பிரபுவை அணைவருக்கும் அறிமாகப்படுத்தி வைத்த படம் சங்கிலி தான். அதன் பிறகு ஹீரோவாக நூறு படங்களை கடந்து வந்தார். என்றாலும் 90களின் இறுதியில் வெளிவந்த பரம்பரை பாஞ்சாலங்குறிச்சி படங்களின் பெரிய வெற்றிக்கு பிறகு வெளிவந்த மற்ற சில படங்கள் அத்தகைய வெற்றியை பெற முடியாமல் போனது. அதனால் இளையதிலகம் பிரபுவும் தன் இடத்தை விட்டு இறங்கி வந்தார்
மருதாணி மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற படங்களின் மூலம் டைரக்டராகத் தான் காலடி எடுத்து வைத்தார் ராமராஜன். இந்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன. அதன் பிறகு 86ல் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் மூலம் கதநாயகனாக அறிமுகமானார். முதல் படம் நூறு நாட்களை கடந்து ஓடினாலும் அடுத்தடுத்து வந்தவைகள் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் போனது. என்றாலும் 88ல் வந்த எங்க ஊரு பாட்டுக்காரன் தான் அவரை தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகர்களில் ஒருவராக உயர்த்தி வைத்தது. அதன் பிறகு வரிசையாக வெற்றித்திரைப்படங்கள் ராமராஜன் நடிப்பில் வலம் வந்தன.
கரகாட்டக்காரன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்ப்பட்டது. தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் பின்வாங்க ராமராஜன் தானே தயாரித்து இயக்கி நடித்து தானும் தமிழ்சினிமாவில் இருப்பதை உறுதி செய்து வந்தார். அதில் அவர் இயக்கிய சீறி வரும் காளை நன்றாக சீறவும் செய்தது. ஆனால் கடைசியாக நடித்து வந்த பொன்னானநேரம் அவருக்கு நல்ல நேரமாக அமையாமல் போகவே அவரும் நடிப்பை விட்டு விலகினார். அடுத்த சில வருடங்களுக்கு பிறகு கடைசியாக ராமராஜன் நடிப்பில் வெளிவந்தது மேதை மட்டுமே
இரவும் பகலும் படத்தில் அறிமுகமாகி வரிசையாக 150 படங்களை நடித்து முடித்திருந்தர் ஜெய்சங்கர். துணிச்சலாக பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இப்போது வரை துப்பறியும் கதாபாத்திரத்தில் பலர் நடித்திருந்தாலும் அவர்கள் நடிப்பு இவருக்குப் பிறகு தான். 79 இறுதியில் வெளிவந்த படங்கள் ஜெய்சங்கருக்கு சரியாக அமையவில்லை. அவர் நன்றாக நடித்திருந்தாலும் கதை காட்சியமைப்பு அவருக்கு கைகொடுக்காமல் போனது.
1977ல் வெளிவந்த காயத்திரி திரைப்படத்தில் ஜெய்சங்கர் தான் கதாநாயகன். ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார். அடுத்த ஒரு சில வருடத்தில் இருந்து இந்த நிலை மாறியது. முரட்டுக்காளை திரைப்படத்தில் ஜெய்சங்கர் வில்லன்.ரஜினிகாந்த் கதாநாயகன்

சாதாரணமாக இவர் நடித்தால் அந்த திரைப்படம் நூறுநாட்கள் ஓடும். அதுவே கையில் ஒரு மைக்கை பிடித்து நடித்தால் வெள்ளிவிழாவாக மாறும்.என்ற பெருமைக்கு உரியவராக திகழ்ந்தார் நடிகர் மோகன். மிகக்குறிய காலத்தில் நூறு படங்களுக்கும் மேல் நடித்து முடித்தார். ஆனாலும் 90களின் தொடக்கத்தில் இவர் தன் உருவத்தை மாற்றி நடித்த உருவம் இவருடைய நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது போலாகிவிட்டது. உருவத்திற்கு பிறகு தற்போது வரை மோகன் நடித்தது இரண்டே படங்கள் தான்.
இவர்களைப் போல் திரைவானில் ஜொலித்தவர்கள் ஜெயித்தவர்கள் இன்னும் ஏராளம் உண்டு

Comments
Post a Comment