நன்றியுள்ள ஜீவன்

ரோட்டில் அனாதை போல் ஆங்காங்கே சுற்றித் திரிந்துகொண்டிருந்தாலும் அதற்கு நண்பர்களாக  பக்கத்து தெருவிலும் அடுத்த தெருவிலும் ஏராளம் உண்டு. தன் கூட்டத்தில் ஒன்றுக்கு சின்ன அடிபட்டாலும் அனைத்தும் ஆதரவாக சேர்ந்து கொண்டு யாரையோ திட்டுவது போல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணும். இப்படி தன் இனத்திற்கு மட்டுமல்ல அதன் மீது அன்பு செலுத்தும் அனைத்து மனிதர்களுக்கும் நாய் நன்றியுள்ள ஜீவன் தான்.
ஒருவர் அதற்கு ஒரு முறை அன்போடு உணவு வைத்தாலும் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறை அவர் அதனை கடந்து செல்லும் பொழுதெல்லாம் நன்றியுடன் வாலாட்டி வரவேற்கும்



நாய்கள் தன்னை வளர்ப்பவர்களுக்கு காவலன் கொள்ளையர்களுக்கு காலன்.
குறைக்கிற நாய் கடிக்காதுனு சொல்வாங்க. அது முதலில் எச்சரிக்கை கொடுக்கவே குறைக்கிறது.அதை மீறும்போது தான் குறைக்கிற நாயும் கடிக்கும். ஊளையிடும் நாய்கள் ஆகாது.அது அபசகுணம் என்றும் கூறப்படுகிறது.உண்மையில் அது அபசகுணம் அல்ல,தன் உடலில் ஏதோ பாதிப்பு வந்ததை அடுத்தவருக்கு உணர்த்தவே ஊளையிடுவதாக கூறுகிறார்கள். கதவுகள் ஒரு வீட்டிற்கு பாதுகாப்பு என்றாலும் கதவின் பக்கத்தில் நிற்கும் நாய் அந்த வீட்டிற்கு பாதுகாவலன். கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட அவரை அரவனைத்து அன்பான வார்த்தைகளை கூறினாலே போதும் அவர் மனதில் நம்பிக்கை ஏற்ப்படும். அப்படித்தான் உணவு கொடுக்காவிட்டாலும் கூட வளக்கும் நாயை பாசமாக தடவிக்கொடுத்தாலே அவர் அருகில் அமர்ந்து தன் அன்பை வெளிப்படுத்தும்.காட்டும் பாசத்திற்கு அடிமையாகி விடும்

ஒருவரை திட்டும்போது மற்ற விலங்குளின் பெயரைச் சொல்லி திட்டுவதை இதன் பெயரை சொல்லி திட்டுவது தான் அதிகம். அதற்கு என்ன காரணம்  என்று புரியாத புதிராகவே இருக்கிறது.அது காலங்காலமாக வரும் வார்தையாகவே மாறிவிட்டது. நாய்கள் பைரவருடைய வாகனம். இறைவன் அரவனைப்பில் வளர்ந்த உயிரினம். மனிதர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவே வாழ்கின்றது

Comments

Post a Comment

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்