தமிழ் திரைப் பக்கம்
என்னதான் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் ஒரு சில தோல்வி படங்களை கொடுக்கும் போது தமிழ் சினிமா அவர்களை ஒதுக்கி ஓரத்தில் உட்கார வைத்து விடும். அல்லது கதாநாயகன் என்ற இடத்தை பறித்து விடும். இதில் ஒரு சிலரை தவிர மற்ற அணைவருக்கும் இதே நிலை தான். ஆனாலும் முழுமையாக தமிழ் சினிமாவை இப்படி குறை கூற முடியாது. அதற்கு காரணம் மிகக்குறைவு தான். கால மாற்றத்தினால் தான் அதிகமாக ஏற்படுகிறது என்று கூறலாம். அறிமுகமானது நலந்தானா திரைப்படம். ஆனால் பிரபுவை அணைவருக்கும் அறிமாகப்படுத்தி வைத்த படம் சங்கிலி தான். அதன் பிறகு ஹீரோவாக நூறு படங்களை கடந்து வந்தார். என்றாலும் 90களின் இறுதியில் வெளிவந்த பரம்பரை பாஞ்சாலங்குறிச்சி படங்களின் பெரிய வெற்றிக்கு பிறகு வெளிவந்த மற்ற சில படங்கள் அத்தகைய வெற்றியை பெற முடியாமல் போனது. அதனால் இளையதிலகம் பிரபுவும் தன் இடத்தை விட்டு இறங்கி வந்தார் மருதாணி மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற படங்களின் மூலம் டைரக்டராகத் தான் காலடி எடுத்து வைத்தார் ராமராஜன். இந்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன. அதன் பிறகு 86ல் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் மூல...